இணையும் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் கூட்டணி – விரைவில் வெளியாகும் Mr. X!

FIR திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் தான் மனு ஆனந்த், தற்போது அவருடைய இயக்கத்தில் பிரின்ஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் மிஸ்டர் X. ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் முதன் முதலில் இணையும் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்பொழுது வெளியாகி உள்ளது.
அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் தான் ஆர்யா. தான் நடித்த முதல் படத்திலேயே Filmfare விருது பெற்றவர், தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் 2009ம் ஆண்டு பாலா இயக்கத்தில் நான் கடவுள் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
தன்னுடைய நடிப்பில் வேறு ஒரு பரிணாமத்தை இந்த படத்தின் மூலம் காட்டி புகழ் பெற்றார். தற்போது முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருந்து வரும் ஆர்யா, இறுதியாக காபி வித் காதல் மற்றும் வசந்த முல்லை ஆகிய படங்களில் கேமியோ ரோலில் தோன்றி நடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் ஆர்யா நடிப்பில் மிஸ்டர் X என்ற திரைப்படம் எதிர்வரும் 2024ம் ஆண்டு வெளிவர காத்திருக்கிறது.