சர்க்கரை என நினைத்து பிளீச்சிங் பவுடரை சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் சீதாராஜ். 2-வது மகள் இசக்கியம்மாள் (வயது 5). இவள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அருகில் உள்ள ஒரு வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அந்த வீட்டில் இருந்த பிளீச்சிங் பவுடரை சர்க்கரை என்று நினைத்து அந்த சிறுமி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. வலியால் துடித்த இசக்கியம்மாளை பார்த்து அந்த வீட்டுக்காரர் இதுபற்றி சீதாராஜீக்கு தகவல் கொடுத்தார்.

அதிர்ச்சி அடைந்த சீதாராஜ் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இசக்கியம்மாளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.

Advertisement

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சீதாராஜ் தனது மகள் இசக்கியம்மாளை வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால் நாளாக, நாளாக இசக்கியம்மாள் உடல் மெலிந்து கொண்டே போனது. பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டதால் அவளுக்கு இந்த நிலை ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பிளீச்சிங் பவுடரை சாப்பிடுவதற்கு முன் அழகாக இருந்த இசக்கியம்மாள் தற்போது உடல் மெலிந்து பரிதாபமாக காட்சி அளிக்கிறாள்.

இசக்கியம்மாள் உணவு சாப்பிட முடியாமல் அவதிப்படுகிறாள். திரவ உணவு மட்டுமே அவளால் சாப்பிட முடிகிறது.

இசக்கியம்மாளின் நிலையை அறிந்து கொண்ட செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ்கண்ணன் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறார்.