பயணிகள் வாகனங்களுக்கான காற்றை சுத்தப்படுத்தும் கருவியை அறிமுகப்படுத்திய ஆம்வே

பயணிகள் வாகனங்களுக்கான துய்மைப்படுத்தும் சாதனத்துக்கான தேவை எப்போதும் அதிகரித்துவருவதை அடையாளம் கண்டுள்ள ஆம்வே நிறுவனம், இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கார் காற்று சுத்திகரிப்பு அமைப்பான Atmosphere Drive-ஐ அறிமுகப்படுத்துகிறது.

தன் அதிகபட்ச வேகத்தில் மணிக்கு 30m3 தூய காற்று வழங்கும் விகிதத்தைக் கொண்ட Atmosphere Drive அமைப்பு காற்றைத் தூய்மைப்படுத்துகிறது, நாள்தோறும் மக்கள் நெடுந்தூரம் பயணம் செய்கிறார்கள், அதிக நேரத்தைக் காருக்குள் செலவிடுகிறார்கள் என்பதால், Atmosphere Drive அமைப்பின் அறிமுகம் இனிவரும் ஆண்டுகளில் இந்தியப் பயணிகள் எல்லாருடைய ஓர் அவசியத் தேவையாக மாறும்.

காற்றில் உள்ள துகள்களில் 99% செயல்திறனுடன் நீக்குகிறது. இதன் Three in One வடிகட்டல் தொழில்நுட்பம் மூன்று நிலைகளில் செயல்பட்டு 300க்கும் மேற்பட்ட மாசுகளை அகற்றுகிறது, செயல்திறனுடன் பணி அயற்றுகிறது Atmosphere Drive அமைப்பு மூன்று நிலைகளில் செயல்பட்டுக் காற்றைச் செயல்திறனுடன் வடிகட்டுகிறது, காருக்குள் இருக்கும் காற்றைத் தூய்மைப்படுத்துகிறது.

Advertisement

நிலை 1: ஒரு முன்வடிகட்டியைப் பயன்படுத்தித் தலைமுடி, தூசு போன்ற பெரிய துகள்களை நீக்குகிறது.

நிலை 2: ஒரு பார்ட்டிகுலேட் வடிகட்டியைப் பயன்படுத்தித் தூசு, PM2 மற்றும் புகை போன்ற சிறிய, காற்றில் பறக்கும் துகள்களை நீக்குகிறது.

நிலை 3: ஒரு கார்பன் வடிகட்டியைப் பயன்படுத்தித் துர்நாற்றத்தை, வாயு நிலை மாசுபடுத்திகளைக் குறைக்கிறது.

Atmosphere Drive அமைப்பு காற்றில் பறக்கும் புகையிலைப்புகை மற்றும் வெளிவிடல்களுடன் ஃபார்மால்டிஹைட், டொலுயென்ஸ் மற்றும் பிற கொந்தளிப்பான கரிமச் சேர்மங்களையும் அகற்றுகிறது.

செயல்திறனுடன் இயங்கும் Atmosphere Drive அமைப்பு அமைதியாக, சிறப்பாகப்பணியாற்றுகிறது. அதன் உணரித் தொழில்நுட்பம், வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது தானே இயங்குகிறது, காற்றுத் தர அளவுகளை உடனுக்குடன் வழங்குகிறது, அதற்கேற்பச் செயல்படுகிறது.