பிரபல கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் மரணம்

பிரபல கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் கிரிகெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச போட்டியில் அறிமுகமான சைமண்ட்ஸ் பேட்ஸ்மேன் ஆகவும், பந்துவீச்சாளராகவும் இருந்துள்ளார்.

Advertisement

ஆஸ்திரேலியா அணிக்காக 198 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சைமண்ட்ஸ் 5,088 ரன்கள் மற்றும் 133 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,462 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார்.

இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கடந்த மாதம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னின் அதிர்ச்சி மரணம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழப்பு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.