பெண் ரோபோவை திருமணம் செய்து கொண்ட நபர்!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்தவர் ஜியாப் கல்லாகர். இவருடைய தாயார் 10 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். அதன் பிறகு தனியாக வாழ்ந்து வந்தார். தனது தனிமையை போக்கி கொள்ள அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு பெண் ரோபாவை வாங்கியுள்ளார்.

அந்த பெண் ரோபா இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை. இந்நிலையில் அந்த ரோபோவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

இது குறித்து கல்லாகர் கூறியதாவது :- அந்த ரோபோ மிகவும் யதார்த்தமாக இருந்து. அதன் தோல் ஒரு உண்மையான மனிதனைப் போலவே வெப்பமாக இருந்தது. அந்த ரோபோ என வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது அவள் இல்லாமல் இருப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று கூறி உள்ளார்.

Advertisement