விரைவில் உயர்கிறது ஆட்டோ கட்டணம்? எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுசீரமைப்பது தொடர்பாக போக்குவரத்து இணை ஆணையர் சிவக்குமரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

8 ஆண்டுகளுக்கு முன் ஆட்டோ மீட்டர் கட்டணம் குறைந்தபட்சம் 1.5 கி.மீ க்கு ரூ.25 எனவும், அதன் பின் ஒவ்வொரு கிமீக்கு ரூ.12 எனவும் தீர்மானிக்கப்பட்டது.

Advertisement
today tamil news

குறைந்தபட்ச தொகையை ரூ.50 எனவும், அதன் பின் ரூ.25 ஒவ்வொரு கி.மீக்கு நிர்ணயிக்க வேண்டும் என ஆட்டோ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றி அமைப்பதில் குறைந்தபட்சமாக 1.5 கி.மீ 30 ரூபாய் கட்டணமும் அடுத்த ஒவ்வொரு கி.மீ 13 ரூபாய் இருக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பு ஆலோசனை கூட்டத்தில் கருத்து தெரிவித்து உள்ளதாகவும், ஜி.பி.எஸ் மீட்டர் அரசே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆட்டோ மீட்டர் கட்டணம் மறுசீரமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவுகள் இருப்பதாலும் இந்த நடவடிக்கையை அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.