Search
Search

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அயலான் படத்தில் 4500-க்கும் அதிகமான விஎப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் படம் முழுவதும் ஏலியன் கதாப்பாத்திரம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ‘அயலான்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

You May Also Like