Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோவில் (திருக்கோழி) வரலாறு

ஆன்மிகம்

அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோவில் (திருக்கோழி) வரலாறு

ஊர்உறையூர்
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
மாநிலம்தமிழ்நாடு
மூலவர்அழகிய மணவாளர்
தாயார்கமலவல்லி
தீர்த்தம்கமலபுஷ்கரிணி
சிறப்பு திருவிழாக்கள்நவராத்திரி,கார்த்திகையில் திருப்பாணாழ்வார் திருவிழா பத்துநாள்
அமைத்தவர்சோழ மன்னர்கள்
திறக்கும் நேரம்காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.

கோயில் வரலாறு

ஸ்ரீ ரங்கநாதரின் பக்தனான நங்கசோழ மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான், நாங்கசோழ மன்னனுக்கு புத்திர பேரு இல்லை, ஸ்ரீ ரங்கனிடம் குழந்தை பாக்கியம் தரும் படி வேண்டினான், பக்தியின் பலனாக மஹாலக்ஷிமியை மன்னனின் மகளாக அவதரிக்கும் படி ரங்கநாதர் அருளினார். மன்னர் ஒரு சமயம் வேட்டைக்கு செல்லும் பொழுது ஒரு தாமரை மலரின் மேல் ஒரு குழந்தை இருப்பதை கண்டு மகிழ்ச்சியுடன் எடுத்து அக்குழந்தைக்கு கமலவல்லி என்று பெயர் சூட்டி வளர்த்தனர்.

அக்குழந்தை வளர்ந்த பின் தன் தோழியருடன் வனத்தில் உலவிக்கொண்டிருந்தாள். அப்போது ரங்கநாதர் அவள் முன்பு சென்றார். அவரை கண்ட கமலவல்லி அவர் மீது காதல் கொண்டு அவரையே மணப்பதென உறுதிபூண்டாள். மன்னரின் கனவில் தோன்றிய பெருமாள் கமலாவல்லியை மணக்க இருப்பதாக கூறினார். எனவே மன்னர் கமலவல்லியை ஸ்ரீ ரங்கம் அழைத்து சென்றார். அங்கு ரங்கநாதருடன் கமலவல்லி ஐக்கியம் ஆனால் பின்பு நங்கசோழ மன்னர் உறையூரில் கமலவளிக்கு கோயிலெழுப்பினர்.

இந்த கோவிலை நாச்சியார் கோவில் என அழைக்கப்படுவர். இக்கோவில் 5 பிரஹாரங்களை கொண்டது மற்றும் 108 திவ்ய தேசங்களில் இரண்டாவது திவ்ய தேசமாகும். இங்கு சுவாமி திருமண கோலத்திலிருப்பதால் திருமண தடை உள்ளவர்கள் அர்ச்சனை செய்தால் திருமணம் கைக் கூடும் என்று சொல்ல படுகிறது. ஸ்ரீ ரங்கத்தில் நடைபெறும் அணைத்து விசேஷங்களும் இங்கு நடைபெறும். ஆனால் ஒரு விசேஷம் தவிர, அது சொர்கவாசல் திறப்பு விழாவாகும்.

திருப்பதி ஏழுமலையானை இப்படி வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும்

ஸ்ரீ ரங்கத்தில் மார்கழியில் நடைபெறும் சொர்கவாசல் திறப்புவிழா இங்கு மாசியில் நடைபெறுகிறது. அனைத்து கோவில்களிலும் பெருமாள் ஏகாதசி அன்று சொர்கவாசல் கடந்து செல்வார். ஆனால் இங்கு நாச்சியார் தாயார் சொர்க்கவாசல் கடந்து செல்வது தனி சிறப்பு. தாயார் பங்குனி மாத ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்ததால் அன்றைய தினம் ஸ்ரீ ரங்கத்திலிருந்து பெருமாள் காவேரி ஆற்றை கடந்து அவ்வழியாக வந்து, நாச்சியார் தாயாரும் ஸ்ரீ ரங்கநாதரும் தம்பதியாக இருந்து அன்று இரவு 11 மணி வரை பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள். பிறகு இரவு 11 மணிக்கு மேல் பெருமாள் ஸ்ரீ ரங்கம் அழைத்து செல்லப்படுகிறார். தாயார் மூலஸ்தானம் சென்று விடுகிறார்.

இந்நாளில் தாயாரையும் பெருமாளையும் ஒன்று சேர தரிசிப்பதால் கணவன் மனைவி இடையே உள்ள சண்டை சச்சரவு தீரும் என்று நம்பப்படுகிறது. அனைத்து பெருமாள் கோவில்களிலும் குங்கும பிரசாதம் தரப்படும். ஆனால் இங்கு சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது .அதுபோல் நாச்சியாருக்கு படைக்க படும் நிவேதனம் அனைத்திலும் மிளகாய் தவிர்த்து மிளகு சேர்த்து செய்யப்படுகிறது. இங்கு ராமானுஜருக்கு தனி சன்னதி உள்ளது.

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.

Continue Reading
Advertisement
You may also like...

More in ஆன்மிகம்

Advertisement
Advertisement
To Top