குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு இல்லையென்றால் மன அழுத்தம் உருவாகும். குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால் உடல் ரீதியான பல நன்மைகள் ஏற்படும். முக்கியமாக குழந்தையின் உணவு செரிமானம், ரத்த ஓட்டம், வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளில் சரியான வளர்ச்சிக்கும், குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறது. மசாஜ் செய்வதால் ஆஸ்துமா, சரும பிரச்சனைகளால் அவதியுறும் குழந்தைகளுக்கு மிகவும் பயன் தரக்கூடிய ஒன்று. மேலும் மன அழுத்தத்தை குறைத்து எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது.

ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதன் மூலம் அவர்களுடைய தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்.

Advertisement

பொதுவாக குழந்தைக்கு 15 20 நாட்கள் ஆன உடனே மசாஜ் செய்ய தொடங்குங்கள் மசாஜ் செய்த பிறகு வெதுவெதுப்பான தண்ணீரால் குளிப்பாட்டி விடுவதன் மூலம் குழந்தைகளுக்கு நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்

குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.