மீண்டும் பழைய ரேட்டிங்கை பெற்ற டிக் டாக்

டிக் டாக் செயலி சுமார் 200 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பொழுதுபோக்கு வீடியோ, Funny வீடியோ என பலவிதமான வீடியோக்கள் உள்ளது. ஆனால் தற்போது ஆபாச வீடியோக்கள், குறிப்பிட்ட சமூகத்தை இழிவாக பேசுவது போன்ற வீடியோக்கள் அதிகம் பரவி வருகிறது.

ஒரு சில பேர் வெறும் லைக்குகளை பெறுவதற்காக விபரீதமான செயல்களில் ஈடுபடுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

இந்நிலையில், யூடியூப் பிரபலமான கர்ரி மினாட்டி என்பவர் யூடியூப் வீடியோக்களில் இருக்கும் தகவல்களை டிக்டாக் பயனாளர்கள் பலரும் திருட்டுத்தனமாகப் பயன்படுத்தி வருவதாகப் பேசி ‘ Youtube VS tiktok : The end” என்ற ஒரு வீடியோ ஒன்றைக் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை YouTube நிறுவனம் நீக்கியது.

Advertisement

ஆபாச சர்ச்சை, தகவல் திருட்டு போன்ற காரணங்களால் டிக் டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது. ட்விட்டரில் #bantiktok என்ற ஹேஷ் டேக்குகள் மூலம் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இதனையடுத்து கூகிள் நிறுவனம் டிக் டாக் செயலியின் ரேட்டிங்கை அதிரடியாக குறைத்தது.

தற்போது அதில் உள்ள 80 லட்சம் போலியான ரேட்டிங்கை நீக்கி மீண்டும் பழைய ரேட்டிங்கை வழங்கியுள்ளது. இந்த ரேட்டிங் பிரச்சனை சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு எதிர்ப்புகள் கிளம்பி வந்தாலும் டிக்டாக் பயனாளர்கள் பலரும் இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.