மேடையில் பாடிய பாலகிருஷ்ணா..கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குறித்து இழிவுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார். அதாவது “ஏ.ஆர்.ரஹ்மான் என்பவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம். ஆனால், அவர் யார் என்றே எனக்கு தெரியாது’ என்று பேசினார் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தது. பாலகிருஷ்ணாவை கலாய்த்து வீடியோவை வெளியிட்டு வந்தனர்.

இந்த சம்பவம் நடந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து பாலகிருஷ்ணாவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் பாலகிருஷ்ணா மேடையில் பாடிய பாடலை தூசி தட்டி எடுத்து வெளியிட்டு தற்போது அதை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisement