கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்திற்கு தடை – இதுதான் காரணம்

கடந்த 2019 ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில், கைதி படத்தின் 2ஆம் பாகத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

tamil cinema news

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் கைதி படத்தின் கதை தன்னுடையது என புகாரளித்துள்ளார்.

Advertisement

ராஜீவ் ரஞ்சன் என்பவர் தான் எழுதிய கதையை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவிடம் கூறியதாகவும் கதை பிடித்திருந்ததால், இக்கதையை படமாக்க எஸ்.ஆர்.பிரபு ஒப்புதல் வழங்கியதோடு அதற்கான முன் தொகையாக ரூ.10 ஆயிரத்தை தன்னிடம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் சொன்ன கதையின் இரண்டாம் பகுதியை எடுத்துக்கொண்டு கைதி முழு படத்தையும் அவர்கள் உருவாக்கி இருப்பதாகவும் கைதி படத்தை சமீபத்தில் பார்த்தபோது தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தனக்கு நஷ்ட ஈடாக 4 கோடி ரூபாயை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வழங்க வேண்டுமெனவும், கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றத்தில் ராஜீவ் ரஞ்சன் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து கைதி படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யவும் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.