லோன் தராததால் வங்கிக்கு தீ வைத்த நபர் – போலீசார் வழக்கு பதிவு

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த வசிம் முல்லா (33) என்பவர் ஹெடிகொன்டா கிராமத்தில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் லோன் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

today tamil news

அவருடைய விண்ணப்பத்தை பரிசீலித்த வங்கி மேலாளர் கடன் தர மறுத்துவிட்டார். ஆத்திரம் அடைந்த வசிம் முல்லா வங்கிக்குள் நுழைந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

இதனால் வங்கியில் இருந்த பொருட்கள் தீக்கிரையாகின. தப்பி ஓட முயன்ற முல்லாவை அப்பகுதி மக்கள் பிடித்து, அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

தற்போது முல்லா மீது ஐபிசி பிரிவு 436, 477 மற்றும் 435 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.