Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

ஆலமரத்தின் மருத்துவ குணங்கள்

banyan tree uses in tamil

மருத்துவ குறிப்புகள்

ஆலமரத்தின் மருத்துவ குணங்கள்

மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அரசமரத்தை போன்றே ஆலமரத்திற்கும் அதிக மருத்துவ குணங்கள் உண்டு.

ஆலமரத்தில் உள்ள பழம், இலை, விழுது என அனைத்தும் மனிதனுக்கு நலம் தருகிறது. ஆலம்பழத்தில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள செல்களை புதுப்பித்து சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.

ஆலமர விழுதுகளில் உள்ள இலைகளை அரைத்து வெண்ணெய் சேர்த்துச் சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

ஆலமர விழுதை அரைத்து தினமும் ஒன்று முதல் மூன்று கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் விந்து நீர்த்துப்போகாமல் தடுக்கப்படும்.

ஆலமர விழுதைப் பொடி செய்து தினமும் காலை மாலை இருவேளையும் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

banyan tree uses in tamil

ஆலமர விழுதை கஷாயம் வைத்துக் குடித்தால் பித்தக் காய்ச்சல் குணமாகும்.

ஆலமர மொட்டுகளைப் பொடி செய்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.

ஆலமர இலைகளைப் பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

ஆலமர இலைகளை எரித்து, ஆளி விதை எண்ணெய்யில் குழைத்து சொட்டை விழுந்த இடத்தில் தடவினால் அங்கு விரைவில் முடி முளைக்கும்.

ஆல மரத்தின் பழுத்த இலைகளை எரித்து, அந்தச் சாம்பலைப் புண்கள் மீது தடவ அவை விரைவில் ஆறும்.

ஆலமர இலைகளை லேசாகச் சூடுபடுத்தி காயங்கள் மீது வைத்துக்கொண்டால் அவை விரைவில் ஆறும்.

ஆலமரத்துப் பால், எருக்கம் பால் இரண்டையும் ஒன்றாகக் கலந்து புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறும்.

ஆலமரத்துப் பாலை உதட்டுப் புண்கள் மீது தடவிவந்தால் அவை விரைவில் ஆறும்.

Continue Reading
Advertisement
You may also like...

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top