விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்: அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஓட்டம்

ஆண்டிபட்டி அருகே வைகை அணையிலிருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக பாசன நீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அமைச்சர்கள் இ.பெரியசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், பி.மூர்த்தி ஆகியோர் மதகை இயக்கி நீரை திறந்து வைத்தனர். மேலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கண்காணிப்புப் பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வந்திருந்தவர்களிடம் இருந்து வாசனைத் திரவியங்களின் நெடி பரவியதால் மதகுப் பகுதியில் இருந்த தேனீக்கள் வெளியேறி அங்குள்ளவர்களை ஆக்ரோஷமாக கொட்டத் தொடங்கின. 15-க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டின. இதனால் பலரும் ஓட்டம் பிடித்தனர்.

Advertisement

இவர்களுக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு நிலைமை சரியானதும் பொதுப்பணித் துறை ஊழியர்கள் இதர மதகுகளிலும் நீரை திறந்துவிட்டனர்.