in

காடுகளினால் நமக்கு என்ன பயன்?

காடு இல்லாமல் மனிதனுக்கு எதுவும் ஆவதில்லை அவை நமக்கு மரம், மரச் சாராயம், பலவித பிசின்கள் ஆகியவை தருகின்றன. காட்டு மரங்களிலிருந்தே நாம் காகிதங்களையும் செயற்கைப் பட்டுகளையும் உருவாக்குகிறோம்.

முற்காலத்தில் மனிதன் காடுகளை நாசப்படுத்தியதோடு அழித்தும் வந்தான். காடுகள் இவ்வாறு அழிந்துவிட்டதால் மரங்களும் ஏனைய பயனுக்குரிய பொருட்களும் கிடைக்காமல் போனது மட்டுமல்ல நாட்டின் தட்ப வெப்ப நிலை மாறியதோடு அதன் தன்மையே மாறுவதாயிற்று. காடுகள் மறைந்த இடங்களிலெல்லாம் பாலைவனங்கள் தோன்றலாயின.

காடுகள் நீர் வளத்தைப் பாதுகாக்கின்றன. மலைகளிலுள்ள அடர்ந்த காடுகளில் மழை பெய்யும் போது, மரங்களின் இலைகளால அதன் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு நீர் வீழுவதால் அங்குள்ள வளமான மண் கரைந்து போவதில்லை. இழுத்துச் செல்லும் மண்ணை மலைச் சரிவிலுள்ள மர வேர்கள் தடை செய்து கொள்கின்றன.

மலைகளில் மரங்களே இல்லாதிருக்குமாயின், மழை வேகமாகப் பெய்து அங்குள்ள வளமான மண்ணை இழுத்துக் கொண்டு போய் விடுகிறது. குளிர்காலங்களில் மலையில் பெய்து உறையும் பனி வெறும் தரையில் விரைவில் உருகி விடும்.

காடுகளில் பெய்யும் பனி மெதுவாகவே உருகும். மேலும் இந்நீர் நிலங்களுக்கும், பண்ணைகளுக்கும், ஊற்றுக்களுக்கும் பூமியின் அடியிலுள்ள ஓடைகளுக்கும் மெதுவாகச் சென்று பரவுகிறது.

வேகமுடைய வெள்ளப் பெருக்கு மரங்களை வீழ்த்தி விடுகின்றது. வெற்றிடத்தில் விழும் மழை நீரும், உருகும் பனிநீரும் மெதுவாகச் செல்வதற்குப் பதிலாக துரித கதியில் சென்று மறைந்து விடுகிறது.

வண்டல் மண்ணை வாய்க்கால், ஆறுகள், கடல் ஆகியவற்றுக்கு மழை நீர் இழுத்துச் செல்வதினின்றும் காடுகள் தடை செய்கின்றன மரங்களின் வேர்களும், கொப்புகளும் வண்டல் மண் போகாது தடுத்து விடுகின்றன.

ஐரோப்பாவிலும் ஏனைய பல இடங்களிலும் மலையைக் கொண்ட பல மாவட்டங்கள் வெறுமையாகக் காட்சியளிப்பதுடன் பயனற்றும் உள்ளன. அதற்குக் காரணம் ஆண்டுக்கணக்காய் மரங்களை முறித்துக் காடுகளை அழித்ததால் அங்குள்ள வண்டல் மண் முழுவதும் நீரால் இழுத்துச் செல்லப்பட்டதே ஆகும். இப்போது அவ்விடங்களில் எதுவுமே பயிராவதில்லை.

ஆண்டுதோறும் ஓடைகளும், ஆறுகளும் கடலுக்குக் கொண்டு செல்லும் வண்டல் மண் 200000,000 பவுன்களுக்கும் மேலான மதிப்புடையதென்று கணக்கிட்டுள்ளனர். துறைமுகங்கள், நதிக் கால்வாய்கள் போன்றவற்றிலிருந்து இம்மண்ணை மாற்றி அகற்றுவதற்கும் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்படுகின்றன.

இவ்வாறு பெரு மழை பெய்து வண்டல் கொண்டு செல்லப்பட்டு வெறுமையான நிலங்களில் பயிரேற்றுவதற்கு பெரும் தொகை செலவு செய்யப்படுகின்றது. இதனால் மக்களின் செல்வம் அழிந்து வருகின்றது.

இதனை உணர்ந்த சில மேல் நாட்டு மக்கள் இனியும் காடுகளை அழித்தால் மரங்கள், மரச்சாமான்கள, காகிதங்கள், கட்டடச் சாமான்கள் போன்வற்றை தயாரிக்க மரங்கள் கிடைக்காது என்ற காரணத்தினால் நன்கு வளர்ந்த மரங்களை வெட்டுவது தடை செய்யப்ட்டுள்ளது. தேவைக்கு வெட்டினால், அந்த இடத்தில் அதற்கு இனையான செடிகளை வைத்து காடுகளாக வளர்க்கின்றனர்.

இப்போது, பழகலைகழங்களில் காடுகளைப்பற்றியும் அதன் பலன்களைப்பற்றியும் விழிப்புனர்வு பாடங்களை மக்கள் மத்தியில் எடுத்து வருகின்றனர்.

முடிந்தவரை நாமும் மரங்களை காப்போம், நம் அன்னை பூமியை காப்போம்.

சீனாவுக்கு 50,000 கோடியை அள்ளிக்கொடுத்த இந்தியர்கள். கொண்டாடும் சீனா, திண்டாடும் இந்தியா…

ஃப்ளிப்கார்ட்டில் ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு தீபாவளி சலுகை