முன்னுரை:-
முன்னோக்கி நடப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், நடைபயிற்சியின் முக்கியத்துவம் பற்றியும், நடைபயிற்சி செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்பது பற்றியும் தற்போது பார்க்கலாம்.
விளக்கம்:-
உடல் எடையை குறைப்பதற்கும், உடலில் சர்க்கரை அதிகமாக சேராமல் இருப்பதற்கும் நடைபயிற்சி என்பது மிகவும் சாதாரண உடற்பயிற்சி ஆகும். இந்த பயிற்சியை பின்னோக்கி செய்யும் போது அதிகப்படியான நன்மைகள் இருப்பதாக, பல்வேறு உடற்பயிற்சி நிபுனர்களும், மருத்துவர்களும் கூறுகின்றனர்.
நன்மைகள்:-
1. பின்னோக்கி நடப்பதால் உடலின் சமநிலை மேம்படும்.
2. உடற்பயிற்சியின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
3. முன்னோக்கி நடப்பதை விட, பின்னோக்கி நடக்கும்போது, கால்கள் வீசப்படுவது குறையும். இதனால், கால் விரைவிலேயே இறுக்கமாக மாறும். கால் சதைகள் இறுக்கமாக இருக்க வேண்டும் என்று கூறுபவர்கள் இவ்வாறு நடப்பது நல்ல பயனை தரும்.
4. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இந்த பயிற்சியை மேற்கொண்டால் நல்ல விளைவுகள் ஏற்படும். வாரம் 4 முறை என்ற கணக்கில் ஒரு மாதம் செய்தாலே நல்ல விளைவுகளை காணலாம் என்று உடற்பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.
யார் செய்யலாம்..? யார் செய்யக்கூடாது..?
1. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்வது கடினம். அவர்களை போன்றவர்கள் இதுமாதிரியான பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது..
2. ஆப்ரேஷன் செய்துக்கொண்டவர்கள் ( செய்து சில காலம் மட்டும் ஆனவர்கள் ) இதுபோன்ற பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்.
3. மற்ற படி அனைத்து வயதினரும் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். ஆனால், துணைக்கு ஒரு ஆளை வைத்துக்கொண்டு தான் செய்ய வேண்டும். தனியாக செய்யும்பட்சத்தில் பல்வேறு விபத்துகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.