யோகா உடல் மற்றும் மனதுக்கு பல நன்மைகள் தரும் ஒரு பழக்கம். ஆனால், யோகா செய்ய சிறந்த நேரம் எப்போது என்பது பலருக்கு கேள்வி. காலை நேரமா அல்லது மாலை நேரமா யோகா செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தக் கட்டுரை விளக்குகிறது.
காலை யோகா நன்மைகள்
உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சி பெறச் செய்கிறது. காலை நேரம் யோகா செய்வதால் உடல் முழுமையாக எழுந்து புத்துணர்ச்சி பெறுகிறது. மன அழுத்தம் குறையும். புதிய நாளை சந்திக்க மனம் அமைதியாகவும், தெளிவாகவும் இருக்கும்.
உடல் மென்மையாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கும். நாளைய வேலைகளைச் சிறப்பாகச் செய்ய உதவும். சூரிய உதயத்துடன் யோகா செய்வதால் இயற்கையின் சக்தியை பெற முடியும்.
மாலை யோகா நன்மைகள
தினம் முழுவதும் சுருங்கிய தசைகள் மற்றும் மூட்டுகளை இலகுவாக்கும். வேலை முடிந்த பிறகு தசைகள் சோர்வாக இருக்கும், அதை யோகா மூலம் நிவர்த்தி செய்யலாம்.
வேலை அழுத்தத்தையும் மன அழுத்தத்தையும் குறைத்து மனதை அமைதியாக்கும். காலை நேரம் பிஸியாக இருக்கும்போது மாலை நேரம் யோகா செய்ய அதிக நேரம் கிடைக்கும்
சிறந்த நேரம் எது?
தனிப்பட்ட வசதி மற்றும் உடல் நிலை முக்கியம்: சிலருக்கு காலை நேரம் சிறந்ததாக இருக்கும், மற்றவர்களுக்கு மாலை நேரம் பொருத்தமாக இருக்கும்.
தினசரி திட்டம் மற்றும் வாழ்க்கை முறையைப் பொருத்து தேர்வு செய்ய வேண்டும்.