பழைய பிரியாணியை சுட வைத்து சாப்பிட்ட 5 வயது சிறுமி பலி

அரக்கோணம் அருகே புது காலனியை சேர்ந்த சீனிவாசன் என்ற கூலி தொழிலாளி உறவினர் அளித்த பிரியாணியை ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் காலை சுட வைத்து தனது 4 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

உடனே அரக்கோணம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். அதில் கோபிகா என்ற 5 வயது சிறுமி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

மற்ற 3 குழந்தைகளுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இது செய்தி மட்டும் அல்ல – எச்சரிக்கை தகவல்