பாஜக ஆட்சிக்கு வந்தால் 50 ரூபாய்க்கு தரமான மது கிடைக்கும் : ஆந்திர பாஜக அறிவிப்பு

ஆந்திர மாநிலத்தில் 2024-ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தால் தரமான மது வகைகளை ரூ50-க்கு விற்பனை செய்வோம் என்று அம்மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு தெரிவித்துள்ளார்.

அமராவதியில் நேற்று பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அம்மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது : “ஆந்திராவில் ஏராளமான வளங்கள், நீண்ட கடற்கரை இருக்கின்றன, ஆனால், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசும், இதற்குமுன் ஆண்ட தெலுங்கு தேசம் கட்சியும் எதுவும் செய்யவில்லை.

ஆந்திராவி்ல் ஒரு கோடி பேர் மதுக் குடிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். தரமான மதுவை 50 ரூபாய்க்கு தருவோம் என அவர் கூறியுள்ளார். மேலும் இடதுசாரிகள் நாட்டை அழித்துவிட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் குரைக்கும் நாய்கள்” என சோமு வீரராஜு பேசியுள்ளார்.

Advertisement