Search
Search

உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைக்கும் பிளாக் டீ

black tea disadvantages

பிளாக் டீ என்பது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு வகை தேநீர் ஆகும். இதில் உள்ள வலுவான ஆக்ஸிஜனேற்றிகள் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் எடை இழப்பைக் கட்டுப்படுத்த பிளாக் டீ உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

பிளாக் டீ குடித்து வந்தால் ரத்தத்தில் ஆன்டிஆக்சிடண்டுகளின் உற்பத்தி அதிகரித்து தலைமுடி உதிர்வை தடுக்கும். மேலும் தலைமுடி ஆரோக்கியமானதாகவும், வலுவானதாகவும் இருக்கும்.

கடுமையான வயிற்று போக்கு ஏற்படும் போது பிளாக் டீ அருந்தி வந்தால் வயிற்று போக்கு குணமாகும். வயிற்று போக்கு ஏற்பட்ட சமயத்தில் உடல் இழந்த சக்திகளை மீண்டும் பெற உதவும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பிளாக் டீ ஒரு சிறந்த பானமாக இருக்கிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகளை படிய விடாமல் தடுக்கும் ஆற்றல் பிளாக் டீ யில் உள்ளது.

black tea disadvantages

கடுமையான மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

பிளாக் டீ யில் கலோரிகள் மிகவும் குறைவு. ஒரு கோப்பை பிளாக் டீயில் 2 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளன. உங்கள் எடை இழப்புக்கா டயட் உணவில் பிளாக் டீயை சேர்த்துக் கொள்ள விரும்பினால் சர்க்கரை அல்லது பிற பொருட்களை சேர்க்க கூடாது. பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத பிளாக் டீ உங்களின் உடல் எடையைக் குறைக்கச் செய்யும்.

பிளாக் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். மேலும் பெல்லி பேட் எனப்படும் தொப்பையில் உள்ள கொழுப்புகள் குறையும்.

பிளாக் டீ தீமைகள்

பிளாக் டீயில் காபினின் அளவு அதிகம் இருப்பதால் இதனை அதிகமாக குடித்தால் நீரிழப்பை உண்டாக்கும். நீரிழப்பு அதிகமாகும் போது உடல் எடையில் மாற்றம் ஏற்படும். அதே போல பிளாக் டீயில் டானின்கள் எனப்படும் இயற்கை பொருட்கள் உள்ளன. இதனை மிதமான அளவுகளில் எடுத்துக்கொண்டால் எந்த தீங்கும் ஏற்படாது. அதிகமாக எடுத்துக்கொண்டால் குமட்டல் அல்லது வாந்தியை ஏற்படுத்தும்.

Leave a Reply

You May Also Like