சிவகார்த்திகேயன் ரசிகர்களை கடுப்பேற்றிய ப்ளூ சட்டை மாறன்

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள்மோகன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்த ‘டான்’ படம் இன்று வெளியாகி உள்ளது. படம் நன்றாக உள்ளதாக படம் பார்த்தவர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ட்வீட் ஒன்று போட்டிருக்கிறார். தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்கள் தியேட்டரில் படுத்து தூங்குவது போல ட்வீட் போட்டுள்ளார்.

‘டான்’ படம் ரிலீசான நேரத்தில் அந்த படத்தை விமர்சனம் செய்யும் வகையில் ட்வீட் போட்டுள்ளதால் இது சிவகார்த்திகேயன் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது.

Advertisement

நீங்கள் இயக்கிய anti indian படத்திற்கு வந்தவர்கள் தூங்கியபோது எடுத்த புகைப்படமா? என ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

டான் திரை விமர்சனம்