பெற்ற குழந்தையை விமானக் கழிவறையில் விட்டுச் சென்ற தாய் கைது

கௌஹாத்தியில் இருந்து டெல்லிக்கு ஏர் ஏசியா விமானம் சென்றது.
வியாழக்கிழமை தரையிறங்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் விமானத்தின் கழிப்பறையில் ஒரு குழந்தையின் சடலம் இருந்தது.

இது குறித்து விசாரித்தபோது 19 வயது பெண் ஒருவர் விமானத்தின் கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்ததாக ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து தாயை கைது செய்தனர்.

அந்தக் குழந்தை குறைப்பிரசவமாக ஏழரை மாதத்தில் பிறந்ததாக, சஞ்சய் பாட்டியா கூறியுள்ளார்.

Advertisement

குழந்தை இறந்தது எப்படி என்று கண்டறிய உடற்கூறு ஆய்வு முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், அதன்  பிறகு  நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.