மலை உச்சியில் அறுந்து விழுந்த கேபிள் கார்: 8 பேர் பலி

இத்தாலியில் மலை உச்சியில் கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 8 பேர் பலியானதாக இத்தாலியன் ஆல்பைன் மீட்பு குழு தெரிவித்துள்ளது. Mottarone மலை உச்சியில் இந்த விபத்து நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Stresa-விலிருந்து மொட்டரோன் உச்சிக்கு கேபிள் காரில் செல்ல சுமார் 20 நிமிங்கள் ஆகுமாம், இந்த பயணித்தின் போது நடுவில் ஒரு இடத்தில் கேபிள் கார் நிறுத்தப்படுமாம்.

அந்த கேபிள் காரில் சுமார் 11 பேர் இருந்துள்ளதாகவும் அதில் 8 பேர் உயிரிழந்ததாகவும் மீட்பு பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இரண்டு குழந்தைகள் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆல்பைன் மீட்பு செய்தித் தொடர்பாளர் வால்டர் மிலன் முன்னதாக ராய் நியூஸ் 24 தொலைக்காட்சிக்கு கேபிள் கார் அதிக உயரத்தில் இருந்து விழுந்து நொறுங்கியுள்ளதாக கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.