கால் டாக்ஸி திரை விமர்சனம்

சரவணன், அஸ்வினி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் பா பாண்டியன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

நகரத்தில் மர்ம கும்பல் ஒன்று கால் டாக்ஸி ஓட்டுனர்களை குறிவைத்து அவர்களை கொலை செய்து கார்களை திருடி செல்கிறது. கால்டாக்சி டிரைவராக இருக்கும் சந்தோஷ் சரவணன் அவருடைய சக தோழர்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். இதனால் கால் டாக்ஸி ஓட்டுவதற்கு பதட்டமான சூழல் ஏற்படுகிறது.

அந்த மர்ம கும்பலை பிடிப்பதற்காக சந்தோஷத்துடன் முயற்சி செய்கிறார். அந்த மர்ம கும்பல் யார்? எதற்காக அவர்கள் இதனை செய்கிறார்கள்? இறுதியில் அந்த மர்ம கும்பல் பிடிபட்டதா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

Advertisement

அறிமுக நாயகனாக களமிறங்கி இருக்கும் சந்தோஷ் சரவணன் ஆக்ஷன் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். குறிப்பாக கொலைகார கும்பலை பற்றி அவர் விசாரிக்கும் காட்சி சிறப்பாக இருக்கிறது.

கால் டாக்சி டிரைவர்கள் நிலைமையை படம் எடுத்து சொல்கிறது. கதாநாயகியாக வரும் அஸ்வினி வழக்கமான கதாநாயகியாக இருந்து வருகிறார். நான் கடவுள் ராஜேந்திரன் படத்தை கலகலப்பாக கொண்டு செல்கிறார்.

ராமதாஸ், பசங்க சிவகுமார், சந்திரமௌலி, திலீபன் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு விழிப்புணர்வு தரும் படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பா பாண்டியன். ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம்.

பாணரின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இல்லையென்றாலும் பின்னணி இசை படத்திற்கு விருவிருப்பு கொடுக்கிறது. எம்.ஏ ராஜதுரையின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.