சென்னையில் கால் டாக்சிகள் ஆம்புலன்ஸ்களாக மாற்றம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் 108 ஆம்புலன்ஸ்களின் தேவை அதிகரித்துள்ளது. அந்த வாகனங்களுக்கான பளுவை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி 250 கால் டாக்சிகளை ஆம்புலன்ஸ்களாக மாற்றியுள்ளது. அதில் முதற்கட்டமாக 50 கார்கள் ஆம்புலன்ஸ் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இந்த சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊரடங்கால் வேலைவாய்ப்பின்றி இருந்த நிலையில் இந்த சேவை தங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement