Search
Search

நீர் நிலைகள் ஆக்கிரமிப்பா? கேப்டன் மில்லர் படக்குழுவிடம் விசாரணையா? அமைச்சர் துரை முருகன் பதில்!

பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் “கேப்டன் மில்லர்”, இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகளின் அமைப்புகளில் இருந்த ஒரு போராளியின் பெயர் கேப்டன் மில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவருடைய கதை படமாக்கப்படுகிறதா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த திரைப்படத்தில் பிரியங்கா, நிவேதிதா மற்றும் சுரேஷ் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள சில மலையடிவாரப் பகுதிகளில் குண்டு வெடிப்பது போன்ற சில காட்சிகள் படமாக்கப்பட்டது.

ஆனால் இவை உரிய அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாக கூறி படபிடிப்பு நிறுத்தப்பட்டது, அதன் பிறகு அம்மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று தற்போது தொடர்ச்சியாக படபிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் கேப்டன் மில்லர் குழுவினர் படபிடிப்பு நடத்தும் பகுதியில் உள்ள நீர் நிலைகளை ஆக்கிரமித்து படபிடிப்பு நடத்தி வருவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் நீர் மேலாண்மை துறை அமைச்சர் துரைமுருகன் இது குறித்து பதில் அளித்துள்ளார், அவர் வெளியிட்ட அறிக்கையின்படி, நீர் நிலையை ஆக்கிரமித்து படப்பிடிப்பு நடத்த வேண்டிய தேவை என்ன?.

அதற்கு அவர்கள் உரிய அனுமதி பெற்றுள்ளார்களா? இல்லையா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும். அதில் தவறு இருக்குமானால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

You May Also Like