வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்த மனைவியை கணவரின் உறவினர்கள் கொடுமைப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் குணா பகுதியில் பெண் ஒருவரின் கழுத்தில் ஒரு சிறுவனை ஏற்றி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்க வைத்துள்ளனர். அந்தப் பெண் மெதுவாக நடந்து செல்லும் போது அவரே குச்சியால் ஒருவர் அடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.
இந்த வீடியோவை பார்த்த பெரும்பாலானோர் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக குணா பகுதி போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.