in

அரை நிர்வாண சாமியார் ஆபாச வழக்கில் கைது

கேரளாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ரெகானா ஃபாத்திமா சமூக வலைதளங்களில் அரை நிர்வாணமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்த கேரள காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்கள் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து கோயிலுக்குள் நுழைய இடது சாரி அமைப்பைச் சேர்ந்த பலர் முயன்றனர். அந்த முயற்சியின்போது நாடு முழுவதும் பிரபலமடைந்தவர் ரெகானா ஃபாத்திமா.

Case filed against Rehana Fathima

இவர் சமீபத்தில், தனது முகநூல் பக்கத்தில் சிவப்பு நிற சார்ட்ஸ் அணிந்தபடி, மேற் சட்டை எதுவுமின்றி வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

மேலும் அந்த படம் குறித்து கருத்து ஒன்றையும் ரெகானா பதிவிட்டிருந்தார். அதில், “நம் சமூகத்தில் தாயை நிர்வாணமாக எத்தனை குழந்தைகள் பார்த்திருக்கிறார்கள். இதனால் பெண்களின் உடல் தவறாகச் சித்தரிக்கப்படுகிறது. இந்த நோயைக் குணப்படுத்த பாலியல் சார்ந்த கல்வி வீட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டும்” எனக் கருத்து கூறியிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து அருண் பிரகாஷ் என்ற வழக்கறிஞர் ரெகானா மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார். புகாரின் அடிப்படையில் கேரள காவல்துறை ரொகானாவை ஆபாச வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவ்வபோது சர்ச்சையில் சிக்கும் ரெகானா, இடது சாரி அமைப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.