கைது செய்யப்பட்ட மாரிதாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிதாஸ். இவர் Maridhas Answers என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கத்தில் பாஜகவுக்கு ஆதரவாகவும் திமுகவிற்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

news in tamil today

இந்நிலையில் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீருடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். மேலும் முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக பாலகிருஷ்ணன் என்பர் மதுரை நகரக் காவல் துறையில் புகார் ஒன்றை அளித்தார்.

பிறகு காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்றபோது “தன்னை விசாரணைக்கு அழைக்க சம்மன் இருக்கிறதா?” என்று கேள்வியெழுப்பினார். அப்போது பா.ஜ.கவின் நிர்வாகிகளும் தொண்டர்களும் மாரிதாஸ் வீட்டின் முன்பாக குவிந்தனர்.

Advertisement

புதூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மாரிதாஸ் மீது சட்டப் பிரிவுகள் 153 A (ஜாதி, மத, இனங்களுக்குள் முரண்பாடு ஏற்படுத்தும் வகையில் பேச்சாலும் எழுத்தாலும் செய்கையாலும் தூண்டி விடுதல்) , 504 (தனது கருத்தால் அல்லது பதிவால் சமூகத்தில் பிரச்னை ஏற்படும் என தெரிந்தே பதிவிடுதல்), 505 ( ii ) (ஜாதி, மத, இன வேறுபாடு ஏற்படுத்தி பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் தூண்டி விடுதல்), 505 ( i ) ( b ) (பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மாரிதாஸ் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மாரிதாஸ் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் எனவும் கூறப்படுகிறது.