கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவை மறைத்த அர்ச்சகர் மீது நடவடிக்கை.

திருத்தணி முருகன் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவை அங்கவஸ்திரம் கொண்டு மறைத்த 2 அர்ச்சகர்கள் மீது இந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவிலில் உண்டியலுக்கு நேராக இருந்த சிசிடிவி கேமராக்களை அர்ச்சர் ஒருவரின் கட்டளையின் கீழ் மற்றொரு அர்ச்சர் அங்கவஸ்திரம் கொண்டு மறைப்பது போன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

tamil news

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விரைந்து துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Advertisement