Search
Search

அதிரடி காட்டிய விஷால் – சக்ரா திரை விமர்சனம்

சென்னையில் சுதந்திர தினத்தன்று இரண்டு கொள்ளையர்கள் வரிசையாக 49 வீடுகளில் கொள்ளையடிக்கிறார்கள். அடுத்தபடியாக ராணுவத்தில் பணியாற்றி வரும் விஷாலின் தந்தைக்கு சொந்தமான சக்ரா மெடல் திருடு போகிறது. இந்த தகவல் போலீசுக்கு தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திர தினத்திற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பித்து விடுகின்றனர். அந்தத் திருடர்கள் கண்டுபிடிப்பதற்காக போலீசுடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்துகிறார் விஷால்.

போலீஸ் உயர் அதிகாரியும் தனது காதலியுமான ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கிறார். அவருக்கு உறுதுணையாக விஷால் இருக்கிறார். இந்த விசாரணை மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகிறது. இறுதியில் அந்த கொள்ளையர்களுக்கு பின்னால் இருக்கக்கூடிய முக்கிய புள்ளி யார்? அவர்களே கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம், டெல்டா விவசாயிகள் தற்கொலை, டிஜிட்டல் இந்தியா என சில இடங்களில் அரசியல் வசனங்கள் பேசப்படுகிறது. நாயகன் விஷால் தனது உறுதியான உடலுடன் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். காதல், சென்டிமென்ட் என அனைத்திலும் கலக்கியிருக்கிறார்.

கொள்ளையர்களை பிடிக்க விஷால் எடுக்கும் யுத்திகள் ரசிக்கும்படியாக உள்ளது. நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் விஷாலுக்கு இணையாக போட்டி போட்டு நடித்துள்ளார். வழக்கமான கதாநாயகி போலில்லாமல் போலீஸ் அதிகாரியாக வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் படத்தின் முக்கியமான கதாபாத்திரம் யார் என்றால் அது ரெஜினா தான். இவருக்குள் இப்படி ஒரு நடிப்பு திறமையா? என்று கேள்வி கேட்கும் அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தின் இயக்குனர் எம்.எஸ் ஆனந்த் திரைக்கதையை திறமையாக கையாண்டுள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சியிலும் வலு சேர்த்திருக்கிறது. சண்டைக்காட்சிகளில் பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

You May Also Like