Search
Search

பொன்னியின் செல்வன் பாகம் 3 உருவாகுமா? – “சின்ன பழுவேட்டரையர்” கொடுத்த சிக்னல்

பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இரு தினங்களுக்கு முன்பு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. STR உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் தற்போது பெரிய அளவில் ஹிட்டாகி வருகின்றது. குறிப்பாக ஊமை ராணி யார் என்று (பொன்னியின் செல்வன் புத்தகம் படிக்காதவர்கள்) எதிர்பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு அதற்கான பதில் கிடைத்துள்ளது.

மீண்டு வரும் சோழர்கள், பொன்னியின் செல்வர் மற்றும் வந்தியத்தேவனின் மாஸ் சண்டை காட்சிகள் எல்லாமே மெய் சிலிர்க்கவைக்கிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த இன்னொரு சுவாரசிய கருத்தை வெளியிட்டுள்ளார் இந்த படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ள இரா. பார்த்திபன்.

5 பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் கதையை இரண்டு பாகங்களில் எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். ஆனால் இதுதான் முடிவா என்று கேட்டால், அது கொஞ்சம் சந்தேகமே. இந்நிலையில் பார்த்திபன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “Part 3 எடுக்க இருக்கிறதா கேள்வி. இருந்தா மகிழ்ச்சி!” என்று கூறியுள்ளார்.

You May Also Like