இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சந்திரமுகி 2.. ரிலீஸ் தேதி என்ன? – ஆர்வத்தில் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், மக்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறிய ஒரு படம் தான் பி. வாசு இயக்கத்தில் உருவான சந்திரமுகி.
இந்த படத்தை பிரபு மற்றும் அவருடைய சகோதரர் ராம்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் அவர்களுடன் நயன்தாரா முதல் முதலில் ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் இந்த திரைப்படம் தான்.
சுமார் 19 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திரைப்படம், 70 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் வெற்றி கண்டது. இந்நிலையில் சுமார் 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் வாசு அவர்கள் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது இயக்கி வருகிறார்.
இந்த இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் அவர்களும், சந்திரமுகியாக பிரபல பாலிவுட் நடிகை கங்கா ஆகியோர் நடித்துள்ளார். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான முருகேசன் கதாபாத்திரத்தில் மீண்டும் கலக்க வருகின்றார் வைகை புயல்.
மைசூரில் நேற்று இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் இந்த படத்தின் படபிடிப்பு முடிக்கப்பட்டு அடுத்த கட்ட பணிகள் துவங்கி, செப்டம்பர் 15ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று இந்த படம் வெளியாக வாய்ப்புகள் மிக மிக அதிகமாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.