பணமோசடி செய்த நடிகர் ஆர்கே சுரேஷ் மீது காவல் நிலையத்தில் புகார்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், ராமமூர்த்தி எர்த் மூவர்ஸ் என்ற பெயரில் கனரக வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வந்துள்ளார். 2017ம் ஆண்டு தொழில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து 2018 ம் ஆண்டு சென்னை கொடுங்கையூரை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்ய ரூ. 10 கோடி கடன் வாங்கி தருவதாக கூறினார்.

அதன் பேரில் திரைப்பட நடிகரான ஆர்.கே. சுரேஷை அறிமுகப்படுத்தினார். அப்போது ஆர்.கே.சுரேஷ் தனக்கு தெரிந்த வங்கி மேலாளர் மூலமாக கடன் ஏற்பாடு செய்து தருவதாகவும் அதற்கு கமிஷனாக ரூ. 1 கோடி கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

பிறகு ரூ. 1 கோடி ஏற்பாடு செய்து ஆர்.கே.சுரேஷ் வங்கி கணக்கில் ரூ. 93 லட்சமும், நேரடியாக ரூ. 7 லட்சம் பணமாக கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் சொன்னபடி ரூ. 10 கோடி பணம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

Advertisement

இதனையயடுத்து ஆர்.கே.சுரேஷை அணுகிய போது அவர் மிரட்டும் தோணியில் பணம் தரமுடியாது, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று கூறினர். அப்போது தான் ஆர்.கே.சுரேஷ் மற்றும் கமலகண்ணன் ஆகியோர் கடன் வாங்கி தருவதாக ரூ. 1 கோடி ஏமாற்றியது தெரியவந்தது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு ராமமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமமூர்த்தியின் மனைவி வீனா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.