4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..! லிஸ்ட்-ல உங்க மாவட்டம் இருக்கா..?

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள், தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்;ளனர்.