நோக்கியாவையும் விட்டு வைக்காத கொரோனா! – மூடப்பட்ட தொழிற்சாலை!

சென்னையில் சிப்கார்ட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் நோக்கியா நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அத்தொழிற்சாலை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அது, நான்கு கட்ட ஊரடங்காக மே இறுதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், பல தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் செயல்பட தளர்வுகள் அனுமதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னையில் உள்ள ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் சில நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க தொடங்கின.

இந்நிலையில் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கும் நோக்கியா தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிற ஊழியர்களுககு நடத்தப்பட்ட சோதனையில் 40 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் பல ஊழியர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

Advertisement