கடல்நீர் மட்டம் உயர்வு காரணமாக சென்னை, தூத்துக்குடி கடலுக்குள் மூழ்கும்: நாசா எச்சரிக்கை

காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவான ஐ.பி.சி.சி (IPCC) தனது ஆய்வு அறிக்கையை நேற்று ஜெனிவாவில் தாக்கல் செய்திருந்தது. அந்த அறிக்கையில் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் பருவநிலை மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

tamil news today

அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலை உள்ளடக்கிய இந்திய பெருங்கடல் பூமியின் சராசரியை விட வேகமாக வெப்பமாகி வருவதாகவும், கடற்கரையோர பகுதிகளில் கடல்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் ஐ.பி.சி.சி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கடற்கரையை ஒட்டியுள்ள 12 நகரங்கள் 2100ம் ஆண்டுக்குள் கடலுக்குள் மூழ்கும் என தெரிவித்துள்ளது.

கண்ட்லா, குஜராத் – 1.87 அடி

Advertisement

ஒக்ஹா, குஜராத் – 1.96 அடி

பவுநகர், குஜராத் – 2.70 அடி

மும்பை, மகாராஷ்டிரா- 1.90 அடி

மோர்முகாவ், கோவா – 2.06 அடி

மங்களூர், கர்நாடகா – 1.87 அடி

கொச்சி, கேரளா – 2.32 அடி

பரதீப், ஒடிசா- 1.93 அடி

கிதிர்பூர், கொல்கத்தா – 0.49 அடி

விசாகப்பட்டினம், ஆந்திரா – 1.77 அடி

ஆகிய நகரங்களும் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.