சமீப காலமாக ஆரோக்கிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்திருக்கும் இந்த காலத்தில், “சியா விதைகள்” (Chia Seeds) என்பவை உணவியல் உலகில் சூப்பர் ஃபுட் என அழைக்கப்படுகின்றன. ஆனால் இது புதிதாக இல்லாமல், பழங்கால மாயன் மற்றும் அஸ்டெக் மக்கள் பயன்படுத்திய ஆற்றல் மிக்க உணவாக இருந்தது என்பதை நாம் மறக்கக் கூடாது.
சியா விதைகள் என்ன?
தாவரவியல் பெயர்: Salvia Hispanica, சியா விதைகள் புதினா குடும்பத்தை சேர்ந்தவை. இது பொதுவாக கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் சிறிய விதைகளாக இருக்கும். “சியா” என்ற வார்த்தைக்கு மாயன் மொழியில் “ஆற்றல்” என்பது அர்த்தம்.
சியா விதையின் ஊட்டச்சத்து தகவல்கள்
வெறும் 28 கிராம் சியா விதையில்:
- ஃபைபர்: 11 கிராம்
- புரோட்டீன்: 4 கிராம்
- ஒமேகா-3 கொழுப்பு: 5 கிராம்
- கால்சியம்: 18%
- மாங்கனீஸ், மெக்னீசியம், பாஸ்பரஸ்: 27–30%
- அமினோ அமிலங்கள்: 11 (அதில் 9 முக்கியமானவை உள்ளன)
- கலோரிகள்: 137 (இதில் நார்ச்சத்து நீக்கிய பிறகு 101 மட்டுமே)
சியா விதையின் மருத்துவ நன்மைகள்
1. இதயம் மற்றும் நரம்பு நலன்
- சியா விதைகள் உடலில் உள்ள free radicals பாதிப்பை குறைத்து இதய நோய்கள், அல்சைமர் போன்ற பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பதற்காக செயல்படுகின்றன.
- Anti-oxidant அமிலங்கள் அதிகம் உள்ளது.
2. நீரிழிவு மற்றும் எடை குறைப்பு
- நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகம் இருப்பதால் பசியை கட்டுப்படுத்தி எடை குறைக்க உதவுகிறது.
- கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
3. எலும்பு மற்றும் தசை நலன்
- பால் பொருட்களை விட அதிக கால்சியம் கொண்டதால் எலும்புகளுக்கு உறுதி தரும்.
- ஒமேகா-3 கொழுப்பு அமிலம், தசைகளுக்கும் நன்மை தரும்.
4. அழகு பராமரிப்பு
- தோலின் ஈரப்பதம், மென்மை மற்றும் சுருக்கமின்மை ஆகியவற்றில் சியா விதைகள் நன்மை தருகின்றன.
- கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான தாமிரச்சத்து, துத்தநாகம் போன்றவை இதில் அடங்கியுள்ளன.
- முகப்பரு மற்றும் கருமை குறையவும் உதவுகிறது.
பெண்களுக்கு :
- சியா விதையில் இருக்கும் Alpha-linoleic acid, மார்பக புற்றுநோயை எதிர்க்கும் திறன் கொண்டது.
- Tryptophan என்ற அமினோ அமிலம், தூக்க ஹார்மோன்களை ஊக்குவிக்கிறது.
சியா விதைகளை எப்படி சாப்பிடுவது?
- பழம்/காய்கறி சாலட்: மேல் தூவி சாப்பிடலாம்.
- ஜூஸ், ஸ்மூத்தி, மில்க் ஷேக்: ஊறவைத்து சேர்த்துக்கொள்ளலாம்.
- புட்டிங், சாஸ், ஆம்லெட்: சேர்த்துக் கொதிக்கவைக்கலாம்.
- உணவிற்கு முன்: சியா டிரிங் எடுத்தால் உடற்பயிற்சிக்கு தேவையான ஆற்றலை தரும்.
தினமும் 20 கிராம் அளவில் (1.5 தேக்கரண்டி) 2 வேளைகளில் சாப்பிடலாம்.