Connect with us

TamilXP

சுவையான சிக்கன் புலாவ் செய்யும் முறை

மருத்துவ குறிப்புகள்

சுவையான சிக்கன் புலாவ் செய்யும் முறை

தேவையானவை

சிக்கன்1கிலோ
பச்சரிசி300 கிராம்
தயிர்அரை கப்
முந்திரிப்பருப்பு60கிராம்
ஏலக்காய், லவங்கம்தலா 8
முந்திரிப்பருப்பு60கிராம்
வெங்காயம்3
மிளகு3
தேங்காய்ப்பால்2கப்
பட்டைசிறிதளவு
நெய், உப்புதேவையான அளவு

செய்முறை:

சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும், இரண்டு வெங்காயத்தை நறுக்கிப்போட்டு, பொன்னிறமாக வதக்கவும். பிறகு சிக்கன் துண்டுகளைச் சேர்த்து கிளறி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் மீதமுள்ள ஒரு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, மிளகு, உப்பு, தயிர், அரிசி ஆகியவற்றைச் சேர்த்து தேவையான நீர் ஊற்றி வேகவிடவும். அரிசி பாதியளவு வெந்ததும் சிக்கன் துண்டுகளை அதில் கொட்டி, மேலும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தட்டால் மூடி வேகவிடவும்.

அரிசியும், சிக்கன் துண்டுகளும் நன்றாக வேகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரிப்பு, நறுக்கிய வெங்காயம் சிறிதளவு சேர்த்து, சாதத்துடன் சேர்த்து கிளறவும். 10 நிமிடங்கள் கழித்து பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in மருத்துவ குறிப்புகள்

To Top