இங்கிலாந்து நாட்டில் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவியான டோலி சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார், அந்த பதிவு தற்போது உலகமெங்கும் வைரலாகி கொண்டு வருகிறது.
அந்த பதில் இருந்தது என்னவென்றால், தன்னுடைய வீட்டின் வாசலில் இரண்டு சாக்லேட்டும், ஒரு கடிதமும் இருந்துள்ளது, அதோடு கடிதமும் இருந்துள்ளது என்று கூறிப்பிட்டிருந்தார். அந்த கடிதத்தில்,

”எங்களுடைய கால்பந்து காணாமல் கடந்த ஒரு வாரமாக தேடி வந்தோம். ஆனால் கிடைக்கவில்லை, இதனால் ஒரு வாரமாக கவலையில் இருந்தோம், இதை மட்டும் நீங்கள் கண்டுபிடித்து கொடுக்காமல் இருந்திருந்தால், எங்களுக்கு ஒரு பெரிய இழப்பாக இருந்திருக்கும், எனவே எங்கள் கால்பந்தை கண்டுபிடித்துக் கொடுத்ததற்கு எங்களின் மனமார்ந்த நன்றி.., இந்த கடிதத்தை எழுதும் எங்களுக்கு ஆறு, எட்டு மற்றும் ஐந்து வயது ஆகிறது. என்று கடிதத்தில் பதிவிட்டிருந்தது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் டோலி சூட் பதிவிட்டிருந்தார், அந்த பதிவிற்கு சுமார் 72,000 க்கும் மேல் லைக்கும் 5000 க்கும் மேல் ரீ-ட்வீட் செய்யப்பட்டுள்ளது. கடிதத்தை எழுதிய அக்குழந்தைகளின் நன்றி உணர்வை கண்டு அனைவரும் அவர்களை பாரட்டி வருகின்றனர்.