மீண்டும் இணையும் அந்த காம்பினேஷன்.. அதிகாரப்பூர்வ அப்டேட் விரைவில்!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களின் பட்டியலில் சென்ற பிறகு சிவகார்த்திகேயன் தனது அனைத்து திரைப்படங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார் என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் கடந்த ஆண்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அவர் நடித்து வெளியான திரைப்படம் தான் டான்.
எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா அருள் மோகன், சூரி மற்றும் விஜய் டிவி புகழ் சிவாங்கி போன்ற பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் ஒரு அவரேஜ் ஹீட் என்று கூறலாம்.
தற்பொழுது அவருடைய அயலான் திரைப்படம் திரைக்கு வர காத்திருக்கும் நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்திற்காக தற்பொழுது படப்பிடிப்பு பணியில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் டான் படத்தில் இணைந்த சிபி சக்கரவர்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் காம்பினேஷன் மீண்டும் அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எதிர்வரும் 2024ம் ஆண்டு இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்றும், விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.