in

சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த மேலும் சில சலுகைகள் அறிவிப்பு – முதல்வர் உத்தரவு

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த கடந்த 21-05-2020 அனுமதி அளிக்கப்பட்டது.

முந்தைய அறிவிப்பில், அதிகபட்சமாக 20 நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பு நடத்துமாறு கூறப்பட்டது. ஆனால் அவர்களை வைத்து முழுமையாக படப்பிடிப்பு நடத்த முடியாததால் இதன் எண்ணிக்கையை உயர்த்தும்படி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் செய்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

அதன் கோரிக்கைப்படி, அதிகபட்சமாக 60 நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப தொழிலாளர்களை வைத்து நாளை முதல் படப்பிடிப்பு நடத்தலாம் என உத்தரவிடப்பட்டுள்து.

சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஆணையரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய மாநில அரசு விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

priyanka chopra Hot Pics

Priyanka Chopra Best Hot Photos

“எல்லாரும் வேலைக்கு வாங்க” – மாநகரப் போக்குவரத்துக் கழகம் உத்தரவு