வேளாண் சட்டங்கள் வாபஸ் – கோவை CITU சங்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பிரதமர் மோடி இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுவதாக அறிவித்தார். இதற்கான நடவடிக்கைகளை இம்மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

Latest Tamil news

இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தைததையடுத்து டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்து மேட்டுப்பாளையம் CITU பொது தொழிலாளர் சங்கத்தினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்தும் மேட்டுப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தாலுகா செயலாளர் S.பாஷா. CITU சங்க பொறுப்பாளர்கள் சித்திக். MH. சம்சுதீன். ஆனந்தன். செந்தில்குமார். நவ்ஷாத். செல்வன். ராஜசேகர். சாரதி. ஆனந்தி. லட்சுமி. மல்லிகா. உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அண்ணா மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்

Advertisement