நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் காலமானார்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் காலமானார். இவர் இயக்குநர் பொன்ராமிடம் இணை இயக்குநராகவும் பணியாற்றி வந்துள்ளார் .
சிவ கார்த்திகேயன் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படத்தில் என்னடா இது மதுரைக்காரனுக்கு வந்த சோதனை என்று பவுன்ராஜ் பேசியிருப்பார். இந்த வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அவரது படத்தை மீம்ஸ் கிரியேட்டர்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் மாரடைப்பால் பவுன்ராஜ் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இதனை இயக்குநர் பொன்ராம் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே திரை துறையை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்து வருவது சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.