Search
Search

“என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு”.. விஜயை ஒப்பிட்டு விஷாலை சீண்டிய பிரபலம்!

தளபதி விஜய் கடந்த சில வருடங்களாக செய்து வரும் நல்ல பல விஷயங்கள் அவர் அரசியலில் நுழைவதற்கான ஒரு செயலாக பார்க்கப்படுகிறது என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் சென்ற ஆண்டு தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட அனுமதி அளித்தார் தளபதி விஜய்.

அதில் கவனிக்கத்தக்க விதமாக பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சியின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றியும் பெற்றனர். இது மட்டுமல்லாமல் சென்னையில் ஒரு வார்டில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை விஜய் மக்கள் இயக்கம் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

விஜயை போல நடிகர் விஷாலும் தொடக்கத்தில் இருந்து அரசியல் ஈடுபட்டு தான் வருகிறார், அதற்காக ஒரு கட்சியையும் ஆரம்பித்தார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுகவை சேர்ந்த செல்லூர் ராஜூ அவர்களிடம் விஜயின் அரசியல் என்ட்ரி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

“இது ஒரு ஜனநாயக நாடு, இங்கு அரசியலில் வருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. குறிப்பாக விஜய் கடந்த பல ஆண்டுகளாக அரசியலில் நுழைய நல்ல பல வேலைகளை செய்து வருகிறார்” பல ஹிட் படங்களை கொடுத்தவர், இளைஞர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ள மனிதர் என்று கூறினார்.

ஆனால் இதோடு நிறுத்தாமல் “விஜயாவது பரவாயில்லை பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்த பிறகு இந்த முடிவுக்கு வந்துள்ளார். ஆனால் விஷால் போன்ற ஆட்கள் ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்துவிட்டு நான் தான் அடுத்த முதல்வர் என்று கூறிக்கொள்கிறார்கள்” என்று கூறி கிண்டலடித்து பேசி உள்ளார்.

You May Also Like