கைதிகளை பார்க்க லஞ்சம் கேட்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிளை சிறையில் கைதிகளை பார்க்க உறவினர்களிடம் ஜெயிலர் லஞ்சம் கேட்பதாக உறவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட கிளை சிறையில் 182 கைதிகள் உள்ளனர். இந்த சிறையில் இருக்கும் கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் ஜெயிலர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் லஞ்சம் கேட்டு தொல்லை தருவதாக புகார் எழுந்துள்ளது.

கைதிகளுக்கு கொடுக்கப்படும் பொருட்கள் சரியாக சென்று சேர்வதில்லை. அதேபோல் சரியாக உணவு வழங்குவதில்லை என இன்று காலை 150 க்கும் மேற்பட்ட கைதிகள் காலை உணவை புறக்கணித்தனர்.

Advertisement

இதனிடையே கைதி ரவிக்குமார் என்பவரின் மனைவி கவிதா அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து சிறைச்சாலை வாசலில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கவிதாவை சமாதானம் செய்து அனுப்பினர்.