“பலாத்காரத்தை அனுபவியுங்கள்” காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ்குமாரின் பேச்சு அதிர்ச்சியையும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் பிரச்சினை குறித்து கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று பேசப்பட்டது. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விவசாயிகள் பிரச்சினை குறித்து விரிவாக ஆலோசிக்க நேரம் தருமாறு கோரிக்கை வைத்தனர்.

அப்போது பேசிய சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே, “அனைத்து உறுப்பினர்களும் பேச நேரம் ஒதுக்கினால் எப்படி அலுவல்களை மேற்கொள்வது. நீங்கள் என்ன முடிவு செய்தாலும் நான் ஆம் என்று தான் சொல்வேன். இப்போது இங்கு இருக்கும் நிலைமை என் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. இதை நான் சமாளிக்க முடியாது. அதனால் அமைதியாக நடப்பதை அனுபவிக்கலாம் என முடிவு செய்துவிட்டேன்”. என கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்எல்ஏ கேஆர் ரமேஷ் குமார் “பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாவிட்டால் அமைதியாகப் படுத்து அனுபவிக்க வேண்டும் என்று. நீங்களும் அந்த நிலையில் தான் இருக்கிறீர்கள் ” என்று சபாநாயகரைப் பார்த்து கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ் குமாரின் பேச்சுக்கு சக காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
“பலாத்காரத்தை அனுபவியுங்கள்” காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை#Congress #CongressMLA #Karnataka pic.twitter.com/MBjaHFILnG
— Tamilxp (@tamilxp) December 17, 2021