சமீபகாலமாக பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. சர்ச்சைக்கு உள்ளாகும் படங்கள் அரசையும் அரசின் திட்டங்களையும் விமர்சித்து எடுக்கப்படுகிறது.
துப்பாக்கி
2012ஆம் ஆண்டில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக கூறி குறிப்பிட்ட காட்சிகளை நீக்கக் கோரி போராட்டம் நடந்தது.
விஸ்வரூபம்
2013ம் ஆண்டு கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் பெரும் பிரச்சினைக்கு உள்ளானதை யாராலும் மறக்க முடியாது.
முஸ்லிம் மக்களை புண்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி இந்த படத்திற்கு பிரச்சனை எழுந்தது.
இந்தப் படத்தை DTH ல் வெளியிடப் போவதாக கமல் அறிவித்தார்.
அதற்கு கடும் கண்டனம் இருந்ததால் அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.
தலைவா
விஸ்வரூபம் படம் பிரச்சனை முடிந்த சில மாதங்களில் விஜய் நடித்த தலைவா படமும் சர்ச்சைக்குள்ளானது. தலைவா படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
கத்தி
2014ஆம் ஆண்டில் கத்தி படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் நண்பர் என்பதால் போராட்டம் நடந்தது.
மெர்சல்
2017 ஆம் ஆண்டு வெளிவந்த மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரியை தவறாக விமர்சித்ததாக பாஜக கண்டனம் தெரிவித்தது அதே நேரத்தில் இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது,
பத்மாவத்
ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் நடித்த பத்மாவத் திரைப்படம் இந்திய அளவில் வெளியிடுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
அந்த படத்தில் முஸ்லிம் பேரரசர் அலாவுதீன் கில்ஜி மற்றும் ராஜபுத்திர இளவரசி பத்மாவதி நெருக்கமாக இருப்பது போல் காட்சி இருந்ததால் சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. இதில் ஒரு கார் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
பொழுதுபோக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வந்த படங்கள் தற்போது அரசியலையும் அரசியல் தலைவர்களையும் விமர்சித்து எடுக்கப்படுவதால் சர்ச்சைக்குள்ளாகிறது.