மகாத்மா காந்தி குறித்த சர்ச்சை பேச்சு – இந்து மத தலைவர் மீது வழக்குப்பதிவு

மகாத்மா காந்திக்கு எதிராகவும், நாதுராம் கோட்சேவை புகழ்ந்தும் பேசிய இந்து மதத் தலைவருக்கு எதிராக சத்தீஸ்கர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் “மதங்களின் நாடாளுமன்றம்” நிகழ்ச்சி நடந்தது. இ்ந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிராவை சேர்ந்த காளிச்சரண் மகராஜ் என்ற துறவியின் பேச்சு சர்ச்சைக்குள்ளானது. மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு தலைவணங்குகிறேன் என்று பேசிய அவர் முஸ்லீம் மதத்தை குறித்து கடுமையான சொற்களால் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் மகாத்மா காந்தி குறித்து அவதூறாக பேசி இரு மதங்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கும் வகையில் நடந்து கொண்டதாக மீது காவல்துறையிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. இந்த புகாரை அடுத்து விசாரணை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

ஐபிசி 505(2) 294 ஆகிய பிரிவுகளில் காளிச்சரண் மீது முதல் தகவல் அறிக்கையை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.